தென் ஆப்ரிக்காவுக்கான துணை துாதராக கோவேந்தன் பொறுப்பேற்பு

புதுடில்லி: தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கான நம் நாட்டின், 11-வது துணை துாதராக, தமிழகத்தைச் சேர்ந்த ஐ.எப்.எஸ்., அதிகாரி கோவேந்தன் பொறுப்பேற்றார்.

ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய வெளியுறவு பணியின், 2009- பேட்ச் அதிகாரியான கோவேந்தன், 2011- – 21- கால கட்டத்தில், போர்ச்சுக்கல், பிரேசில் மற்றும் பூடானில் உள்ள நம் துாதரகங்களில் பணியாற்றி உள்ளார். 2021ல், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாகவும் பணியாற்றினார்.

மேலும், நம் வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை செயலகத்தின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றினார். டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில், ‘பாஸ்போர்ட் சேவா’ திட்டப் பிரிவில் இயக்குநராகவும், இணை செயலராகவும் பணியாற்றினார்.

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கான, நம் நாட்டின், 11-வது துணை துாதராக கோவேந்தன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.



Advertisement