ஓசூர் அரசு கலைக்கல்லுாரியில் 29 வரை முதல்கட்ட கலந்தாய்வு

ஓசூர்:ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பாக்கியமணி வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடப்பாண்டு இளநிலை பட்டப்படிப்புகளுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வரும், 29ம் தேதி வரை, முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.


கட் ஆப், 270 முதல், 200 வரை எடுத்த மாணவ, மாணவியருக்கு, அறிவியல், வணிகவியல், வணிகவியல் (கணினி பயன்பாடு), வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கும், தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு, 40 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இன்று (ஜூன் 10) கலந்தாய்வு நடக்கிறது.


நாளை (ஜூன் 11) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 12), சுழற்சி -1ல், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கும், சுழற்சி - -2ல், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், வணிகவியல் (கணினி பயன்பாடு) ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்க உள்ளது.

மீதமுள்ள காலி இடங்களுக்கு, 15 முதல், 18ம் தேதி வரை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், இணையவழி விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், 5 மார்பளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement