3 நாள் பயணமாக டில்லி சென்றடைந்தார் முதல்வர் விஜய்

16

நமது நிருபர்



3 நாள் பயணமாக முதல்வர் விஜய் டில்லி சென்றுள்ளார் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார்.

தமிழக முதல்வராக, மே, 10ம் தேதி விஜய் பொறுப்பேற்றார். இதையடுத்து, 27ம் தேதி டில்லி சென்றார். அங்கு, பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முடியாமல் சென்னை திரும்பினார்.

இந்நிலையில் டில்லியில் நாளை (ஜூன் 11) பிரதமர் மோடி தலைமையில் நடக்கும், 'நிடி ஆயோக்' கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டில்லிக்கு விஜய்க்கு புறப்பட்டு சென்றார்.

Tamil News
Tamil News
அவர் டில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கிறார். நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசும் போது மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திக்க, விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

டில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement