'கல்பனா சாவ்லா' விருது விண்ணப்பிக்க அழைப்பு
உடுமலை: கல்பனா சாவ்லா விருதுக்கு, தகுதியானோர் விண்ணப்பிக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தைரியமான மற்றும் வீரதீர செயல் புரிந்த, பெண்களின் நலன், மேம்பாட்டுக்காக செயல்படுவோருக்கு, நடப்பாண்டு, சுதந்திர தின விழாவில், கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.
தகுதியானவர்கள், http://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பித்த பின், வீரதீரச் செயல்கள், விருதுகள் குறித்த உரிய விவரங்களை நேரில் அல்லது தபாலில் அனுப்ப வேண்டும்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில், அறை எண்: 36 ல் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு, வரும் 19ம் தேதிக்குள் கிடைக்கும்வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
சிறந்த சமூக சேவகர் விருது சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட உள்ளது. சமூக நலனுக்காக தொடர்ந்து பணிபுரிந்துவரும் தனிநபர் அல்லது தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவராக இருக்கவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம். குறைந்தபட்சம், ஐந்தாண்டு சமூக நலன், பெண்களுக்கு பெருமை சேர்த்தல், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் அல்லது நிர்வாகம் சார்ந்த துறைகளில், மக்களுக்காக சேவை செய்திருக்க வேண்டும்.
தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். https://awards.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 19ம் தேதி கிடைசி நாள்.
இவ்வாறு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும்
-
சொல்கிறார்கள் ––––––––– கிராமத்து அசைவ விருந்து சாப்பிட வாங்க!
-
சொல்கிறார்கள் -------––––––––– எங்கள் சமூகம் முன்னேற வேண்டி உழைக்கிறேன்!
-
அசாம் மாநிலத்தில் விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது
-
6 நாட்கள் வெளிநாட்டு பயணம்; ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் மோடி
-
பனையூரில் தொடர்கிறது இணைப்பு விழா; இன்று விஜயதாரணி உள்ளிட்டோர் ஐக்கியம்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,880 அதிகரிப்பு