பாழடைந்த சமுதாய நலக்கூடங்கள் நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி
உடுமலை: பராமரிப்பில்லாமல், பாழடைந்து வரும் சமுதாய நலக்கூடங்களை புதுப்பிக்க, உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. இதில், அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளில், சமுதாய நலக்கூடங்கள் முன்பு கட்டப்பட்டது. இங்கு, குறைந்த வாடகையில், தங்கள் வீட்டு விசேஷங்களை கிராம மக்கள் நடத்தி வந்தனர்.
சமுதாய நலக்கூடங்கள் ஒன்றிய, ஊராட்சி நிர்வாகத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. முறையாக கட்டடங்களை பராமரிக்காததால், மக்கள் சமுதாய நலக்கூடங்களை பயன்படுத்த தயக்கம் காட்டினர்.
உடனடியாக புதுப்பிப்பு பணிகளையும் ஒன்றிய நிர்வாகத்தினர் செய்யவில்லை. இதனால், சமுதாய நலக்கூடங்கள் முற்றிலுமாக பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி, காட்சிப்பொருளாக மாறி விட்டது.
தற்போது முக்கோணம் உள்ளிட்ட பல இடங்களில், சமுதாய கூடங்கள் பாழடைந்து விட்டது. சமூக விரோத கூடமாகவும், கூடத்துக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டும் வருகிறது.
கிராம மக்கள் கூறியதாவது: சமுதாய நலக்கூடங்கள் பராமரிப்பில் காட்டிய அலட்சியத்தால், அவை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டன.
இதனால், சிறு விசேஷங்கள் மற்றும் கூட்டங்களை நடத்த, அதிக வாடகை கொடுத்து நகர்ப்புறங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. சமுதாய நலக்கூடங்களை முழுமையாக புதுப்பித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
மேலும்
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
-
'குவாரிகளில் விரைவில் ஆய்வு'