பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை 'சைமா' நிர்வாகிகளிடம் எம்.எல்.ஏ.க்கள் உறுதி
திருப்பூர்: திருப்பூரில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் தாமோதரன், துணைத் தலைவர் பாலசந்தர், பொரு ளாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தற்போதைய பின்னலாடை தொழில் நிலவரம் மற்றும் நுால் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. சத்தியபாமா, தெற்கு எம்.எல்.ஏ. பாலமுருகன் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடந்தது. திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்களிடம் முன்வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகள்:
தொழிலாளர் விடுதிகள்: போக்குவரத்து நெரிசல் மற்றும் உற்பத்திச் செலவைக் குறைக்க, ஒரே நேரத்தில் 500 முதல் 800 பேர் தங்கும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் 7 முதல் 10 அரசு தொழிலாளர் விடுதிகளை அமைக்க வேண்டும்.
வர்த்தக மையம்: சிறு, குறு உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர வர்த்தக மற்றும் கண்காட்சிமையம் அமைக்கப்பட வேண்டும்.
மின் கட்டணச் சலுகை: விசைத்தறித் தொழில் போல பனியன் நிறுவனங்களுக்கும் 1,000 யூனிட் வரை இலவச மின்சாரமும், அதற்கு மேல் 2,000 யூனிட் வரை யூனிட்டிற்கு 3.50 ரூபாய் மட்டுமே கட்டணமாகவும் நிர்ணயிக்க வேண்டும்.
லாரி பேட்டை: கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மாநகரப் பகுதிக்கு வெளியே அனைத்து வசதிகளுடன் கூடிய லாரி பேட்டை அமைக்க வேண்டும்.
மெட்ரோ ரயில்: கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை அவிநாசி, பல்லடம், சூலுார் வழியாகத் திருப்பூர் வரை விரிவுபடுத்த வேண்டும்.
பின்னலாடை வாரியம்: உற்பத்தியாளர்களின் சவால்களைச் சீர்செய்ய மத்திய--மாநில அரசுகள் இணைந்து 'தனி பின்னலாடை வாரியம்' உருவாக்க வேண்டும்.
தமிழ்நாடு காட்டன் கார்ப்பரேஷன்: தமிழகத்தில் பருத்தி சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். பருத்தியை நேரடியாகக் கொள்முதல் செய்து நிலையான விலையில் வழங்க 'தமிழ்நாடு காட்டன் கார்ப்பரேஷன்' (டி.சி.சி) அமைப்பை உருவாக்க வேண்டும்.
வரி உயர்வு மறு ஆய்வு: கடந்த 3 ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி மற்றும் குப்பை வரியை மறுஆய்வு செய்ய வேண்டும். கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யும் நிறுவனங்களுக்குக் குப்பை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
நலிவடைந்த சிறு மற்றும் குறுந்தொழில்களைப் பாதுகாக்கும் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக எம்.எல்.ஏ.க்கள்உறுதியளித்தனர்.
மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?