கோவிந்த சாலை பகுதியில் சிறப்பு துப்புரவு பணி
புதுச்சேரி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, புதுச்சேரி நகராட்சி சார்பில், உருளையன்பேட்டை தொகுதி, கோவிந்த சாலை பகுதியில் சிறப்பு துப்புரவு பணி நடந்தது.
துப்புரவு பணியை, புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித் துவக்கி வைத்தார். செயற்பொறியாளர் சிவபாலன், நகராட்சி சுகாதார அதிகாரி ஆர் த்தி, வருவாய் பிரிவு அதிகாரி பிரபாகரன், உதவி வருவாய் அதிகாரி பரமேஸ்வரன், பழனிராஜா, இளநிலை பொறியாளர்கள் சாம்பசிவம், கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் லட்சுமணன், சுகாதார ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், பொறியியல் பிரிவு ஊழியர்கள், வருவாய் பிரிவு ஊழியர்கள், கிரீன் வாரியர் நிறுவன ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.
துப்புரவு பணியில், கோவிந்த சாலை பிரதான சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு பொருட்கள், உபயோகப்படுத்தாத பைக்குகள், பழுதடைந்த தொலைக்காட்சி பெட்டிகள், மரச் சாமான்கள், பழைய வீட்டு உபயோகப் பொருட்கள், குப்பைகள், கட்டட கழிவுகள் மற்றும் அழுக்கு மண் உள்ளிட்ட சுமார் 8 டன் அளவுள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எ ன தரம் பிரித்து வளமீட்பு பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.