வேளாண் பல்கலையில் அமைச்சர் திடீர் ஆய்வு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேளாண் துறை அமைச்சர் வினோத் நேற்று ஆய்வு செய்தார்.

பல்கலை துணைவேந்தர் (பொ) சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்களுடன் வேளாண் துறையின் செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை குறித்து கேட்டறிந்தார்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த நெல் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டார். அங்கு மாணவர்களிடம் டிரோன் குறித்த பயிற்சியைக் கேட்டறிந்தார்.

ஆராய்ச்சி மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ரகங்கள், அவற்றின் சாகுபடி முறைகள் மகசூல் குறித்து பல்கலை விஞ்ஞானிகள் அவருக்கு விளக்கினர்.

பல்கலை பழத்தோட்டத்தைப் பார்வையிட்ட அமைச்சர், புதிய பழ வகைகள், விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படும் ரகங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பூச்சியியல் அருங்காட்சியகம், மலரியல் துறை, காக்ஸ்பிட் உள்ளிட்ட துறைகளையும் ஆய்வு செய்தார். பல்கலையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், அவற்றுக்கான நிதி உதவிகள் குறித்து கேட்டறிந்த அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Advertisement