அமெரிக்காவுடன் மீண்டும் போர்... ஹார்முஸ் ஜலசந்தியை மறுபடியும் மூடியது ஈரான்
டெஹ்ரான்: அமெரிக்காவுடன் மீண்டும் போர் துவங்கிய நிலையில், சர்வதேச நீர்வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போதும், பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்து வந்தார். இதனால், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் நேரடி போர் துவங்கியுள்ளது. இதனால், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
ஜோர்டான், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படைத் தளத்தை நோக்கி ஈரான் ராணுவம், டிரோன் தாக்குதல்களை நடத்தியது. இதனால், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடைய, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்பட 22 நாடுகள் தாக்குதலை நிறுத்துமாறு ஈரானுக்கு வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. எந்தக் கப்பலும் செல்ல அனுமதி கிடையாது என்றும், தடையை மீறி ஜலசந்தியை கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் இலக்கு வைத்து தாக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகில் யார் என்ன செய்தாலும் அது இந்தியாவையும், நாட்டின் வளர்ச்சியையும், 100 கோடி மக்களையும் மிகவும் பாதித்தாலும் நடவடிக்கை அவசியம்
இந்த இரண்டுபேரும் உலக அமைதியை கெடுப்பதற்கென்றே இருக்கிறார்கள் ஒரு சமயம் போர் நிறுத்தம் என்கிறார்கள் உடனே திடிரென்று போர் அறிவிக்கிறார்கள் இவர்கள் இருவர்களையும் யாராவது தீர்த்துவிட்டால் உலக அமைதி கிடைக்கும் எப்போது பார்த்தாலும் போர் போர் என்றே சொல்லிக்கொண்டு உலகிலே யாருமே நிம்மதியாக வாழ முடியவில்லை இதற்கு ஒரு முடிவு கிடையாதா ஆண்டவா நீதான் பதில் சொல்ல வேண்டும்
அந்தந்த ஏரியாவுக்கு ஒரு பரம்பொருள் ... ராமாயணம் மகாபாரதம் பாரத கண்டத்துக்குள் தான் ..
இந்த இரண்டு கிறுக்கன் களையும் எல்லோரும் சேர்ந்து அழிக்க வேண்டும். அப்போதுதான் உலக நாடுகளுக்கு நிம்மதி.
அவுங்க அடிச்சுப்பாங்க ..நீங்க ஓரமா உக்காந்து வேடிக்கை பாக்கனும் ...