2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,600 சரிவு

1

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் குறைந்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆபரண தங்கம், கிராம் 14,200 ரூபாய்க்கும், சவரன் 1,13,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்



நேற்று ( ஜூன் 10 ), தங்கம் விலை கிராமுக்கு, 400 ரூபாய் குறைந்து, 13,800 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 3,200 ரூபாய் சரிவடைந்து, 1,10,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்



இந்நிலையில் இன்று (ஜூன் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 5,600 ரூபாய் சரிந்துள்ளது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
https://www.dinamalar.com/news/business-commodity



சிறப்பு வீடியோ!




தங்கம் விலை மேலும் குறையுமா? நகை வாங்க செல்லும் பெண்கள் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement