இன்று 3வது விக்கெட்; மம்தா கட்சி ராஜ்யசபா எம்.பி.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா
கொல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்றாவது ராஜ்யசபா எம்.பி., இன்று ராஜினாமா செய்தார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்வியால், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., உட்கட்சி பூசலால் சிதறி வரும் நிலையில், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த 8ல், திரிணமுல் காங்., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த சுகேந்து சேகர் ராய், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார்.
திரிணமுல் காங்கிரசின் மற்றொரு ராஜ்யசபா எம்.பி.,யான சுஷ்மிதா தேவ், 53, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார். இந்நிலையில் இன்று ராஜ்யசபா எம்.பி. பிரகாஷ் சிக் பராக் தனது பதவியை ராஜினாமா செய்ததால், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது.
பிரகாஷ் சிக் பராய்க்கின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் கட்சியின் பலம் 10 எம்.பி.க்களாகக் குறைந்தது. அடுத்த வாரத்திற்குள் மேலும் மூன்று திரிணமுல் காங்கிரஸ் ராஜ்சபா எம்.பி.க்கள் வரை ராஜினாமா செய்யக்கூடும் என்றும், இது மம்தா தலைமையிலான கட்சிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து (12)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
11 ஜூன்,2026 - 18:54 Report Abuse
இதுபோன்று திராவிட மாடல் அரசுக்கு எப்போது நெருக்கடி வரும் அதுவும் இதேபோன்று ஒவ்வொரு ராஜ்ய சபா பிறகு லோக் சபா எம்பிக்களும் விலகினால் கட்சியில் அப்பனும் புள்ளையாண்டானும்தான் இருப்பார்கள் போதுமே அவர்கள் மருமகனையும் சேர்த்துக்கொண்டு கட்சியை நடத்தலாமே 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
11 ஜூன்,2026 - 18:54 Report Abuse
இதுபோன்று திராவிட மாடல் அரசுக்கு எப்போது நெருக்கடி வரும் அதுவும் இதேபோன்று ஒவ்வொரு ராஜ்ய சபா பிறகு லோக் சபா எம்பிக்களும் விலகினால் கட்சியில் அப்பனும் புள்ளையாண்டானும்தான் இருப்பார்கள் போதுமே அவர்கள் மருமகனையும் சேர்த்துக்கொண்டு கட்சியை நடத்தலாமே 0
0
Reply
V S Venkataramani - ,இந்தியா
11 ஜூன்,2026 - 17:13 Report Abuse
நல்ல மாற்றம். குடும்ப கட்சிகள் வொவ்வொன்றாக அழிய வேண்டும் 0
0
Reply
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
11 ஜூன்,2026 - 14:33 Report Abuse
மம்தா ஆனாலும், எடப்பாடி பழனிசாமி ஆனாலும் சரி, எல்லாம் நெல்லிக்காய் மூட்டை போலத்தான். மூட்டை திறக்கப்பட்டால் நெல்லிக்காய் சிதறும். அதிகாரம் போய்விட்டது அவ்வளவுதான் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
11 ஜூன்,2026 - 14:05 Report Abuse
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பழமொழிக்கேற்ற ஆட்சி செய்தவள் மம்தா. இவளும் இவளுடைய மருமகன் அபிஷேக் பானெர்ஜீ செய்த அநியாயங்களுக்கு - கொலைகள், கட்சிக்காரர்கள் 10000 மேற்பட்ட பெண்கள் மானபங்கம், ஏழைகளின் உதவியில் கட்டிங், தொழில் செய்பவர்களிடம் தினமும் மாமூல், வோட்டு போடாதவன் வீட்டிற்கு வெள்ளை சேலை அனுப்பி உன் கணவன் இறந்து போவான் என்று மிரட்டுவது போன்ற அநியாயங்கள் முடிவுக்கு வருகிறது. பங்களாதேஷிகளின் அநியாயம் முடிவுக்கு வந்தது. 0
0
Reply
KavikumarRam - Indian,இந்தியா
11 ஜூன்,2026 - 13:50 Report Abuse
இனிமேல் சோனியா காங்கிரசின் மாநில தலைவராக மம்தா வலம்வருவார். 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
11 ஜூன்,2026 - 13:04 Report Abuse
இன்னும் எத்தினி விக்கெட்டுகள் பாக்கி யிருக்கின்றன. மேட்ச் எப்போ முடியும்? 0
0
Reply
sengalipuram - ,இந்தியா
11 ஜூன்,2026 - 12:54 Report Abuse
ராஜினாமா செய்தவர்கள் எல்லாம் புனிதர்கள் அல்ல . இவர்களே மறுபடியும் பா ஜ க டிக்கெட்டில் தேர்தலில் போட்டியிட்டால் , இவர்கள் நல்லவர்கள் என்று கருதப்படுவார்கள் . பா ஜ க வின் இந்த போக்குதான் அண்ணாமலை வெளி ஏற காரணம். 0
0
KavikumarRam - Indian,இந்தியா
11 ஜூன்,2026 - 13:48Report Abuse
அவர்கள் புனிதர்கள் இல்லை என்றாலும் மம்தாவும் அபிஷேக் பேனர்ஜியும் ஒன்றும் யோக்கியர்கள் அல்ல. தேச துரோகிகள். பங்களாதேசுக்கு நாட்டின் எல்லையை விற்ற கயவர்கள். 0
0
Reply
S SRINIVASAN - ,
11 ஜூன்,2026 - 12:45 Report Abuse
ஆணவத்தின் உச்சம் மம்தா இனி நடுத்தெருவில். அதுபோலவே இனி திராவிட மாடலும் நடுத்தெருவில் நிற்கும். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11 ஜூன்,2026 - 12:20 Report Abuse
எல்லா விக்கெட்டுகளும் விழுந்த பிறகு, மமதா அவர்கள் "நான் வளர்த்த பச்சைக்கிளி, கூட்டை விட்டு பிரிந்ததடி" என்று பாடிக்கொண்டு, மன்னிக்கவும், புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். கொஞ்சநஞ்சமா அக்கிரமம், அராஜகங்கள் செய்தாய் நீ... விதி வலியது. கர்மா கொடியது. 0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement