அத்திக்கோம்பை காளியம்மன் கோயில் திருவிழா
ஒட்டன்சத்திரம், ஜூன் 12-
ஒட்டன்சத்திரம் கே.அத்திக்கோம்பை காளியம்மன் கோயில் திருவிழா விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. பல்வேறு இடங்களில் இருந்து தீர்த்த கலசங்களில் கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தம் ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக கொண்டு வர அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கிராம தெய்வங்கள் வழிபாடு, கரகம் பாலித்தல் அம்மன் ஊர்வலம்,மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. சவடம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பொங்கல், மாவிளக்கு வழிபாடு நடந்தது. மஞ்சள் நீர் ஊர்வலத்தை தொடர்ந்து மஞ்சள் நீராடல் நடந்தது. முளைப்பாரி, வான வேடிக்கைகள் மேளதாளம் முழங்க அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தலையில் கல்லைபோட்டு கொத்தனார் கொலை கடலுாரில் பயங்கரம்: பக்கத்து வீட்டுக்காரர் கைது
-
வடமாநில வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
-
புகைப்பட கண்காட்சி
-
தைவான் ஹை குளோரி புட்வேர் நிறுவனத்துடன் மணக்குள விநாயகர் மருத்துவமனை ஒப்பந்தம்
-
பஸ் நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்ற பயணிகள் கோரிக்கை
-
பஸ் ஸ்டாண்ட் கடைகளை திறக்காதது ஏன் நகராட்சி கமிஷனரிடம் கலெக்டர் கேள்வி
Advertisement
Advertisement