தைவான் ஹை குளோரி புட்வேர் நிறுவனத்துடன் மணக்குள விநாயகர் மருத்துவமனை ஒப்பந்தம்
புதுச்சேரி: தைவானைச் சேர்ந்த ஹை குளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஊழியர்களுக்கு முழுமையான தொழில்சார் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அதன் மூலம் பணியாளர்களின் உடல்நலம், தொழில் இட பாதுகாப்பு, அவசர மருத்துவ உதவி மற்றும் நலத்திட்டங்கள் வலுப்படுத்தப்படுகின்றன. தொழிற்சாலை வளாகத்தில் வாரம் முழுதும் 24 மணி நேரமும் செயல்படும் தொழில்சார் சுகாதார மையம் அமைக்கப்பட்டு, முதலுதவி, வெளிநோயாளர் ஆலோசனை, ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனை, அவசரநிலை சிகிச்சை மற்றும் மேல் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு பரிந்துரை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளன.
காலமுறை உடல்நல பரிசோதனைகள், தடுப்பூசி முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பணியாளர் நலத் திட்டங்கள் மூலம் நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
மணக்குள விநாயகர் கல்வி நிறுவனங்களின் தலைவர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன் மற்றும் இணைச் செயலாளர் வேலாயுதம் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயக்குநர் காக்னே, டீன்கள் கார்த்திகேயன், சஞ்சய், பதிவாளர் தட்சிணாமூர்த்தி, இணைப் பதிவாளர் ராஜ்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், சிறப்பு சிகிச்சை மைய டாக்டர் செந்தில்குமார் பங்கேற்றனர்.
முன்னதாக, தைவான் பிரதிநிதிகளுக்கு மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி சார்பில் தகவல் கையேடு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும்
-
கிறிஸ்துவ போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி
-
பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்த திமுக 'மாஜி'க்கள் மீது நடவடிக்கை?
-
திமுக - தவெக தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித் ஷா திட்டவட்டம்
-
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு குண்டாஸ்
-
வடலுார் பொறியாளர் இல்ல திருமண விழா
-
அரசு மகளிர் கலைக்கல்லுாரி: அமைச்சர் உறுதி