வடமாநில வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது நீக்கம் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

விருத்தாசலம் சித்தலுார் ரவுண்டானா பகுதியில் தனியார் டிரான்ஸ்பார்மர் ரிப்பேரிங் கம்பெனி உள்ளது. இதில், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்தர்கான் மகன் அங்கீத்குமார், 22, என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல், பழுதான டிராான்ஸ்பார்மரில் ஆயில் லீக்கேஜ் சரிசெய்யும் பணியில் அங்கீத்குமார் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்ததால், எதிர்பாராதவிதமாக அங்கீத்குமார் மீது மின்சாரம் தாக்கியது.

உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement