பஸ் ஸ்டாண்ட் கடைகளை திறக்காதது ஏன் நகராட்சி கமிஷனரிடம் கலெக்டர் கேள்வி
சிவகங்கை,ஜூன் 13-சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட 18 கடைகளை ஏலம் விட்ட பிறகும் திறக்காதது ஏன் என கலெக்டர் நகராட்சி கமிஷனரிடம் கேள்வி எழுப்பினார். சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் ரூ.1.93 கோடியில் 18 கடைகள் கடந்த தி.மு.க., ஆட்சியில் புதியதாக கட்டப்பட்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது.
இந்த கடைகளை ஏற்கனவே இங்கு கடை நடத்தியவர்களுக்கே வழங்க வேண்டும். முறையாக அறிவிப்பு வெளியிட்டு கடைகளை டெண்டர் விட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால் கடைகள் கட்டி முடிந்த நிலையில் 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்தது.
இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்பே 18 கடைகளுக்கும் ஏலம் நடந்துள்ளது.
ஒரு கடைக்கு ரூ.2.50 லட்சம் டெபாசிட், மாதம் ரூ.9,000 வாடகை கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏலம் எடுத்தவர்களுக்கு நகராட்சியினர் அனுமதி கடிதம் கொடுத்து விட்டனர். அதற்கு பின்னரும் கடைகளை திறக்காமல் பூட்டியே வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை கலெக்டர் பொற்கொடி பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஏன் கட்டி முடிக்கப்பட்டுள்ள கடைகளை திறக்காமல் வைத்துள்ளீர்கள் என நகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் கேட்டுள்ளார். அவர் விரைவில் திறந்து விடுவதாக அளித்துள்ளார். ஆனால் கடைகளை சில கவுன்சிலர்களின் உறவினர்கள் பெயருக்கு எடுத்து கூடுதல் டெபாசிட், வாடகை பெறவே பூட்டி வைத்திருந்தது கலெக்டரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இக்கடைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். * விரைவில் கடைகளை திறப்போம்: நகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது: கலெக்டர் ஆய்வின் போது கடைகளை திறக்காமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியது உண்மை தான். சட்டசபை தேர்தலுக்கு முன்பே 18 கடைகளையும் ஏலம் விட்டுவிட்டோம். விரைவில் பஸ் ஸ்டாண்ட் கடைகள் திறக்கப்படும் என்றார்.
மேலும்
-
கிறிஸ்துவ போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி
-
பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்த திமுக 'மாஜி'க்கள் மீது நடவடிக்கை?
-
திமுக - தவெக தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித் ஷா திட்டவட்டம்
-
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு குண்டாஸ்
-
வடலுார் பொறியாளர் இல்ல திருமண விழா
-
அரசு மகளிர் கலைக்கல்லுாரி: அமைச்சர் உறுதி