பஸ் நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்ற பயணிகள் கோரிக்கை
திட்டக்குடி, ஜூன் 13–
திட்டக்குடி பஸ் நிலையத்தில் தள்ளுவண்டி கடைகளின் ஆக்கிரமிப்புகளால் பயணிகள், பொது மக்கள் கடும் அவதியடைகின்றனர்.
திட்டக்குடி பஸ் நிலையத்தை பயன்படுத்தி சுற்றியுள்ள பெருமுளை, சிறுமுளை, கீழ்ச்செருவாய், வதிஷ்டபுரம், தருமக்குடிக்காடு, கோடங்குடி, கோழியூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு விருத்தாசலம், தொழுதுார், திருச்சி, கடலுார், சென்னை உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
பஸ் நிலைய நிழற்குடையில் பலர் தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி, வேர்க்கடலை உள்ளிட்ட வியாபாரம் செய்து வருகின்றனர். பஸ் நிலையத்தில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், பஸ்கள் நின்று செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பஸ் ஏற முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
எனவே, நிழற்குடையில் ஆக்கிரமித்துள்ள தள்ளுவண்டி கடைகளுக்கு உரிய இடம் ஒதுக்கி, பஸ் நிலையத்தில் சிரமம் இன்றி பயணிகள் பஸ் ஏற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
கிறிஸ்துவ போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி
-
பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்த திமுக 'மாஜி'க்கள் மீது நடவடிக்கை?
-
திமுக - தவெக தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித் ஷா திட்டவட்டம்
-
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு குண்டாஸ்
-
வடலுார் பொறியாளர் இல்ல திருமண விழா
-
அரசு மகளிர் கலைக்கல்லுாரி: அமைச்சர் உறுதி