ஒரகடத்தில் சேதமடைந்த சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார், ஜூன் 12–
ஒரகடம் மேம்பாலம் சந்திப்பில் சேதமடைந்த சாலையால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத் தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்டலுார் – வாலாஜாபாத் சாலைகள் சந்திக்கும் ஒரகடத்தில் மேம்பாலம் அமைந்துள்ளது. ஒரகடம் மேம்பாலம் வழியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிப்புரியும் ஊழியர்கள், ஒரடகம் வழியாக சென்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் மார்க்கமாக இருந்து வரும் வாகனங்கள், ஒரகடம் மேம்பாலத்தில் கீழ் இடது புறம் திரும்பி, வண்டலுார், தாம்பரம், சென்னையின் பல பகுதிகளுக்கு செல்கின்றன.
இந்த நிலையில், ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை சந்திப்பு பகுதி சேதமடைந்து உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த ஒரகடம் சந்திப்பு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
-
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை; கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்
-
கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்!
-
ரூ.134 கோடி சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு; இபிஎஸ் விமர்சனம்
-
மும்பையில் ரூ.11 கோடி கஞ்சா கடத்தல்; 'மிஸஸ் கேரளா' போட்டியாளர் கைது
-
போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது; சொல்கிறார் உதயநிதி