காலிறுதியில் சிந்து: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில்

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சிந்து முன்னேறினார்.
சிட்னியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, இஷாராணி மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 22-20, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.


மற்றொரு போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா, மாளவிகா பன்சோத் மோதினர். இதில் தான்வி சர்மா 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் தான்யா ஹேம்நாத் 12-21, 15-21 என, தாய்லாந்தின் சோசுவோங்கிடம் தோல்வியடைந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன், அர்ஜுன் ஜோடி 21-17, 21-7 என, ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஓவன், நியூசிலாந்தின் டிலான் சோட்ஜாசா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.


கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் ரவாத், மணீஷா ஜோடி 19-21, 18-21 என, ஜப்பானின் அகிரா கோகா, நாட்சு சாய்டோ ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Advertisement