'பழனிசாமிக்கு நாசுக்கான அறிவுரை!'

1

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, மதுரையில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், 'எம்.ஜி.ஆர்., -எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க.,வை துவங்கினாரோ, அது வெற்றியடைய வேண்டும். அ.தி.மு.க.,வை ஏசியவர்கள், தன்னை விமர்சித்து பேசியவர்கள் குறித்து கவலைப்படாமல், கட்சி வளர்ச்சி தான் ஒரே குறிக்கோள் என, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தாய் உள்ளத்தோடு நடந்தவர் ஜெயலலிதா.

'அதேபோல் ஒவ்வொரு தலைவரும் நடந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா எப்படி கட்சியை கட்டி காப்பாற்றினாரோ, அதேபோல் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்' என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு ஆதரவும் தெரிவிக்காம, எதிர்ப்பும் தெரிவிக்காம நாசுக்கா அறிவுரை சொல்லிட்டாரே பா...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.

Advertisement