அயோத்தி ராமர் கோவில் நன்கொடை வசூலில் மோசடி?
அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கணக்கு பொறுப்பாளராக இருந்த மஹிபால் சிங், நன்கொடை வசூலில் நீண்ட காலமாக முறைகேடுகள் நடப்பதாக சமீபத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
இதே குற்றச்சாட்டை முன்வைத்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், 'அயோத்தி கோவில் நன்கொடை விவகாரத்தில் பா.ஜ., மவுனம் சாதிக்கிறது' என, விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இது குறித்து ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாசின் வாரிசான மஹந்த் கமல் நயன் தாஸ் நேற்று கூறியதாவது:
ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தில் மோசடி நடந்திருப்பதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து, பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் நேர்மையான, வெளிப்படையான விசாரணை தேவை என்பதால் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, முன்னாள் பா.ஜ., - எம்.பி.,பிரிஜ் பூஷன் சிங் கூறுகையில், 'நன்கொடையில் முறைகேடு நடந்தது தொடர்பாக எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ' ஆனால், அந்த உண்மைகளை வெளியே சொன்னால் எனக்குதான் பிரச்னை. இதில் தொடர்புடையவர்கள் எல்லாம் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள்' என்றார்.
@quote@ எனக்குதான் பிரச்னை
ராமர் கோவில் நன்கொடையில் முறைகேடு நடந்தது தொடர்பாக எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ஆனால், அந்த உண்மைகளை வெளியே சொன்னால் எனக்குதான் பிரச்னை. அவர்கள் எல்லாம் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள். எனவே, தற்போது உண்மையை சொல்லும் தைரியம் எனக்கு இல்லை. சமயம் வரும் போது, உண்மைகளை பேசுவேன்.
பிரிஜ் பூஷன் சிங், முன்னாள் பா.ஜ., - எம்.பி.,quote
பாஜக ஆட்சியில் வரி மட்டும் சரியாக வாங்குகிறார்கள் வெள்ளைக்காரனை போல
ஊழல், ஒழுங்கீனம் நம் டிஎன்ஏ வில் இருக்கிறது! சாமி, ஆசாமி எல்லோரிடமும் நம் ஜனங்கள் இந்த வேலையைக் காட்டுவார்கள்! இந்த மாதிரி கருத்து சொல்ல வருந்துகிறேன்! ஆனால் உண்மை அதுதான்!
புகைச்சல் கிளம்பிவிட்டது. பாரபட்சமின்றி விசாரிப்பது சிறப்பு. தூய்மையானவர்கள் என்று நிருபிப்பது கடமை .
பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாட்டு... பொழுது போகவில்லை என்றால் விசாரிக்கலாம்.