பட்டதாரி ஆசிரியர் கழகம் பாராட்டு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பொதுத்தேர்வு தேர்ச்சியில் மாநிலத்தில் பிளஸ் 2ல் 12ம் இடம், பத்தாம் வகுப்பில் 6 ம் இடத்திற்கு முன்னேறி சாதித்துள்ளதை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் மாயவன் பாராட்டியுள்ளார்.
அவர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினியை சந்தித்து பொதுத்தேர்வு வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். அப்போது 10 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு நிலை உடனடியாக வழங்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்ட உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி கழகத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணா, முன்னாள் மாநில தலைவர் திருநீலகண்ட பூபதி, முன்னாள் மாவட்ட தலைவர் ராபர்ட் கென்னடி, மாவட்ட நிர்வாகிகள் தண்டாயுதபாணி, ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார் பங்கேற்றனர்.
––