அயநல்லுார் கிராமத்தில் வீடு, கோவிலில் திருட்டு

கும்மிடிப்பூண்டி, ஜூன் 13–

கும்மிடிப்பூண்டி அருகே அயநல்லுார் கிராமத்தில், வீடு மற்றும் கோவிலில் திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த அயநல்லுார் காமாட்சிபுரம் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் மனைவி அமுதா, 43. முன்னாள் ஊராட்சி தலைவர். குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். பீரோவை உடைத்து, அதிலிருந்த, 2,000 ரூபாய், 500 கிராம் வெள்ளி பொருட்களை திருடினர்.

அருகில் உள்ள விநாயகர் கோவிலில் சுவர் ஏறி குதித்து, உண்டியலை உடைத்து, பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளை திருடி சென்றனர்.

கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement