நொய்யல் குறுக்கே பாலம் பணி விரைவுபடுத்த உத்தரவு

திருப்பூர், ஜூன் 13– 

கடந்த வாரம் பொறுப்பு அமைச்சர் அருண்ராஜ், அமைச்சர்கள் செங்கோட்டையன், கமலி ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சிப்பணிகள் தேக்கமடைந்தது குறித்து விவாதிக்கப்பட்டது.

நேற்று கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். நெருப்பெரிச்சல் திடக்கழிவு மேலாண்மை மையம், குமார் நகர் குடிநீர் குழாய் பணி, நொய்யல் ஆற்றின் குறுக்கே ஈஸ்வரன் கோவில் அருகே நடக்கும் பாலம் பணி மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன்புற மழைநீர் வடிகால் பணி ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டனர்.

வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத் துறை அனுமதி பெறுவதிலும், கோவில்வழி குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு மின் இணைப்பு பெறுவதிலும் நிலவும் தாமதம் குறித்து கேட்டறிந்த கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணிகளை விரைந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவிட்டார்.

–––

ஈஸ்வரன் கோவில் வீதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் பணிகளை கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆய்வு செய்தார். அருகில், மாநகராட்சி கமிஷனர் அமித்.

Advertisement