விளையாட்டு// தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் சென்னை சவுமியாவுக்கு ‘வெள்ளி’
சென்னை: சண்டிகரில் நடந்து வரும் தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை வீராங்கனை சவுமியா வெள்ளி பதக்கம் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்திய ஜூடோ சங்கம் சார்பில், ஆசிய கேடட் ஜூடோ போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி, பஞ்சாப் தலைநகர், சண்டிகரில் நடந்து வருகிறது.
பல மாநிலங்களைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனையர் பங்கேற்று, பல்வேறு எடை பிரிவுகளில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மகளிர், 40 கிலோ பிரிவில், சென்னை சார்பில் களமிறங்கிய, 17 வயதான சவுமியா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதி போட்டி வரை முன்னேறினார்.
தொடர்ந்து, தன் திறமையின் மூலம் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த தேசிய போட்டியில், தமிழக அணி வென்றுள்ள முதல் பதக்கம் இது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விதிமீறல் கட்டட விவகாரத்தில் அரசுக்கு தேவை... துணிச்சல்! வரன்முறை திட்டத்திற்கு வருமா முற்றுப்புள்ளி?
-
ஆபத்தான சாலை வளைவு பகுதியில் மின் விளக்குகள் இன்மையால் ‘அச்சம்’
-
இன்ஜினியரிங் கனவை நனவாக்கும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி கோலாகலம்: கடலுாரில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
-
விபத்தில் தொழிலாளி பலி மக்கள் ரோடு மறியல்
-
பழநி கோயிலில் நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
ஆசிரியரும் பற்றாக்குறை; வகுப்பறையும் குறைவு சாதிக்கும் அரசு பள்ளிக்கு சோதனை
Advertisement
Advertisement