திமுக ஆட்சியில் முக்கிய துறைகளில் 'டெண்டர்' முறைகேடு; ஆய்வு செய்ய ரகசிய குழுக்கள் அமைப்பு
- நமது நிருபர் -
தி.மு.க., ஆட்சியில், முக்கிய துறைகளில் நடந்துள்ள, 'டெண்டர்' முறைகேடு குறித்து ஆய்வு செய்ய, அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய, ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கமிஷன் கைமாறியது
இவற்றில் முக்கிய துறைகளுக்கு, ஆண்டுதோறும் பட்ஜெட்டில், 20,000 முதல் 40,000 கோடி ரூபாய் வரை, ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிதியில், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், மானியங்கள் வழங்குவது, கட்டமைப்புகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இப்பணிகள் அனைத்தும், ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, தகுதி அடிப்படையில் ஒன்று முதல் ஐந்து தரத்தில், ஒப்பந்ததாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, லட்சங்களில் துவங்கி பல கோடி ரூபாய் வரையிலான பணிகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்கின்றனர்.
தி.மு.க., ஆட்சியில், பல துறைகளில் அமைச்சர்களாக இருந்தவர்கள், தங்கள் பினாமிகளை ஒப்பந்ததாரர்களாக நியமித்து பணிகளை மேற்கொண்டனர். சில அமைச்சர்கள், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பணிகளை வழங்கி, அதற்கான கமிஷனை கறாராக பெற்றுக் கொண்டனர்.
பணிகள் தொடங்கும் முன்பே, முன்பணமாக கமிஷனை பெற்று, பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு துறையில் உள்ள அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர்.
ஒவ்வொரு பணிக்கும், 20 முதல் 40 சதவீதம் வரை கமிஷன் கைமாறியது. த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், முக்கிய துறைகளில் நடக்கும், கமிஷன் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளார்.
ஆலோசனை
இது தொடர்பாக, துறையில் உள்ள அமைச்சர்களுக்கும், செயலர்களுக்கும், பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். 'டெண்டர்' விவகாரங்களில் அமைச்சர்களின் தலையீடு இருக்கக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சட்டசபை கூட்டம் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களுக்கும், அரசுக்கும் பதிலடி தரும் வகையில், பல்வேறு புள்ளி விபரங்களை சேகரிக்க, முதல்வர் உத்தர விட்டுள்ளார். அதன்படி, தி.மு.க., ஆட்சியில், பல்வேறு துறைகளில் நடந்த, 'டெண்டர்' முறைகேடுகள் குறித்து விசாரிக்க ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை தேர்வு செய்து, இந்த குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. துறையின் செயலர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில், இக்குழுவினருடன் முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.
'டெண்டர்' முறைகேடுகள் குறித்து, பல்வேறு தகவல்களை, இக்குழுவினர் திரட்ட தொடங்கி உள்ளனர். இது தொடர்பான விரிவான அறிக்கைகள், அந்தந்த துறை செயலர்கள் வாயிலாக, முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
தன் கண்முன்னே தினமும் ஒரு கொலை கொள்ளை போதை வன்கொடுமை என கணக்கிலடங்காமல் நடக்கிறது. பலமடங்கு பெருகிவிட்டது . ஒரு மண்ணும் புடுங்க முடியவில்லை. தெரியாத ஒன்றை ரகசியமாக பார்ப்பார்களாம். நடிகருக்கு என்ன தெரியும்?. ஏமாற்றுவது கொள்ளையடிப்பதை தவிர எதுவும் தெரியாது . இப்படிஇ பல டிராமாக்கள் போட்டு மக்களை நீண்டகாலம் ஏமாற்றிவிடமுடியாது.
தமிழகத்தை காட்டுமிராண்டிகளின் புகலிடமாக மாற்றும் முயற்சி ஒருபோதும் எடுபடாது.
இவர்கள் திமுகவை விட பலமடங்கு கொள்ளையடிப்பார்கள், கொள்ளைத்தாடிப்பவர்களுக்கு டெண்டர் கொடுப்பார்கள். இவர்களுக்கெல்லாம் அப்பனான மோடியையே பார்த்துவிட்டார்கள். வீண் பேச்சு வெட்டிப்பேச்சு வேண்டாம். உருப்படியாக மாநில நலனுக்காக உழைக்க கற்றுக்கொள்ளுங்கள்.
மோடி தலைமையிலான அகில உலக கொள்ளைக்கார, நாடுதழுவிய ஆக்கிரமிப்பு கும்பலாலேயே ஒன்றும் செய்யமுடியவில்லை. இவரெல்லாம் ஒரு கால் தூசு.
திமுக ஆட்சியைப்பற்றி குறைகூற வெட்டி வெட்டுக்களுக்கு ஒரு அருகதையுமில்லை. மக்களை ஏமாற்றி காலி கும்பல்களின் துணையுடன் ஆட்சிக்கு வந்த கும்பல் தமிழ்நாட்டை சூறையாடும் முயற்சி முறியடிக்கப்படும் .
திமுக ஆட்சியில் தமிழ்நாடெங்கும் பல அறிய பெரிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்கள். தமிழகம் இதுவரை கண்டிராத அளவுக்கும் டிரில்லியன் டாலர் கொள்ளையர்கள் வியக்கும் அளவுக்கு நிறைவேற்றியுள்ளார். அது இனியும் நூறாண்டுக்கு நிலைத்து நிற்கும் மக்கள் வாழ்க்கையில் மக்களின்மனதில் நிலைத்து நிற்கும்.
இவர்கள் கமிசன் வாங்குவதற்கு இன்னொரு பினாமிகளை வைத்துக்கொள்வார்களா?
இவர்கள் தங்கள் பினாமிகளை வைத்துக்கொள்வார்களா? ஏற்கனவே தங்கள் ஏஜெண்டுகளை அணைத்து பதவிகளிலும் மாற்றி பணியமர்த்திவிட்டார்கள் . இனி அடுத்த கட்ட நடவடிக்கைதான்.
அனைவரும் தகுதியானவர்கள்தான்.
99 சதவீத அதிகாரிகள் ஊழலுக்கு துணை போயுள்ளனர். மற்ற பலர் மவுனமாக இருந்து உதவினர். இப்போ யாரை வைத்து விசாரணை செய்யப் போகிறார்கள்?. (திருட்டுமுக வை மிரட்டி சோ FA பெற இப்படியும் ஒரு வழி இருக்கிறதா?)