விபூதி, குங்குமத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன்
மதுரை: 'விபூதி, குங்குமத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தவறில்லை,'' என்று, பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் மதுரையில் கூறியதாவது: பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை விரைவாக நிரப்ப உள்ளோம். சில பிரச்னைகள் நீதிமன்றங்களில் உள்ளன. மற்றவற்றுக்கு, பேசி தீர்வு காண்போம். கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முதல்வர் போல் செயல்படுகிறார் என தி.மு.க.,வினர் விமர்சிப்பதற்கு காரணம், கதை, திரைக்கதை, வசனம், அறிவாலயம் தான். ஆதவ், ஆற்றல் மிக்கவர். அவர் வந்தபின் தமிழகத்தில் பல மாற்றம் நடந்துள்ளதை பொறுக்க முடியாமல் அவரை சிறுமைப்படுத்த அவ்வாறு கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டி பி.டி.ஆர். பொறியியல் கல்லுாரியில் செயல்படும் அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''குழந்தை எதற்கு அழும் என்று தாய்க்கு தெரியும். மாணவர்கள் தங்கள் குறைகளுக்காக என் பெயரில் கடிதம் எழுதினால், சிட்டாக பறந்து வந்து விடுவேன். போனிலேயே வேலையை முடித்து விடுவேன்,'' என்றார்.
'ஜாதி, மத அடையாளத்துடன் பள்ளிக்கு வரக்கூடாது' என கூறியுள்ளீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜ்மோகன், ''மாணவர்கள் கைகளில் பாண்ட் கட்டி வருகின்றனர். வெளியில் இருந்து சிலர் ஜாதியை துாண்டி விடுகின்றனர்.
''அதனால் தான் அப்படி தெரிவித்தேன். நானே விபூதி, குங்குமம் அணிந்து தான் பள்ளிகளுக்கு ஆய்வு நடத்த செல்கிறேன். அதுபோல வருவதில் தவறில்லை,'' என்றார்.
will the minister take steps to eliminate class rooms under the trees and on roof top terraces
அமைச்சர் ஐயா பேசும் பொழுது கவனமாக இருங்கள். நீங்கள் முன்பு பேசியதை கவனித்தால் அவை ஹிந்து விரோதக்கருத்துக்களே. உங்கள் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் திருப்பரங்குன்றம் விஷயத்தில் திருட்டு திமுகவின் கருத்தையே வெளிப்படுத்துகிறார். ஆக இந்த ஆட்சி திருட்டு திராவிடமாடல் 2.0 என்றே தோன்றுகிறது
நடப்பது கிறித்துவ ஜோசப் விஜய் ஆட்சி இதில் விபூதி குங்குமம் தடை செய்யப்படுவது சகஜமே. பாலும் பாலிடாலும் ஒரே வெள்ளை வர்ணத்தில் தான் உள்ளது பால் என்று நினைத்து பாலிடாலை ஆட்சிக்கு கொண்டு வந்தால் இப்படித்தான் ஆட்சி இருக்கும்.
இந்துக்களுக்கு அந்நிய சமயத்தவர்களுக்கு இருப்பதைப்போல் சம உரிமை வேண்டும்.
இந்து வாக்கு வங்கி உருவாக வேண்டும்.
விபூதி, உத்திராட்சம் மற்றும் காப்பு அணியும் உரிமை வேண்டும்.
அரசு இல்லாத கோவில்கள் வேண்டும்.
ஜெய் சிவராம்
இந்துக்களுக்கு ஒரு நாடு வேண்டும், அதில் நான் பிரஜையாக வேண்டும். ஜெய் சிவராம்.
நீ விபூதி குங்குமம் அணிந்ததால் அந்த பிரசாதத்திற்கே கேவலம்
விபூதி குங்குமம் சரி என்றார். கல்லூரி பள்ளி செல்லும் மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது என்று மாத்தி மாத்தி பேசும் அமைச்சர்.
அதெல்லாம் தவரு இல்ல மத வெறிதான் தவறு.அணைத்து மதங்களின் உச்சம் என்றுமே அன்புதான்
இந்திய சரித்திரம் உலக சரித்திரம் உங்கள் கருத்துக்கு மாறாக உள்ளது.
உண்மையான சரித்திரம் கட்டாய படமாக்கப் பட வேண்டும். அன்பு சேவை என்ற சொற்கள் அன்றும் இன்றும் மக்களை ஏமாற்ற மதம் மாற்ற பவிக்கப் படுகின்றன.
கசாப்பு கடைக்காரனிடம் அன்பை எப்படி எதிர் பார்க்க முடியும். அவனவன் தன் மதம் பற்றி விமர்சனம் செய்து கொண்டு இருக்கலாமே
இரும்பு அடிக்கும் இடத்திற்கு ஈக்கு என்ன வேலை
திமுக என்றுமே இந்து மத விரோதம் பாராட்டும் கட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவேதான் திமுக இந்து மத விழாக்களுக்கு வாழ்த்து கூற மறுத்தது. மேலும் திமுக சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்றது. இதனால் கடந்த தேர்தலில் திமுக ஆட்சி அதிகாரத்தை இழந்து தெருவில் நிற்கிறது. அது போன்ற செயலை தவெக நிச்சயம் செய்யாது என நம்பலாம்.
மொதல்ல மாதிரி இல்லை.. ஹிந்துக்கள் ஓட்டு வங்கி உருவாகி விட்டது. நீங்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்து ஆட்சிக்கு வந்த மாதிரி பேசக்கூடாது. இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை. நல்லவன் என்று பெயர் வாங்குவது மிகவும் கடினம்.. அந்த நல்ல பெயரை இழப்பது மிக மிக எளிது. ஆனால் ஒரு முறை கெட்டவன் என்ற பெயரை வாங்கி விட்டால் அவ்வளவு எளிதில் நல்லவன் என்று சான்று வாங்க முடியாது.பார்த்து பேசுங்கள். பார்த்து நடங்கள்..மேலும்
-
கிலோ ரூ.8 வரை விலை உயர்ந்த அரிசி: டீசல் விலை உயர்வு எதிரொலி
-
மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு உறுதி-மொழி
-
பூர்வீக நிலத்தில் வழித்தகராறு அத்தை மகனுக்கு கத்திக்குத்து
-
கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரதம்
-
அதிக ஒலி எழுப்பி சென்ற வாகனங்களுக்கு அபராதம்
-
கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்