ரூ.3.18 லட்சம் பறிமுதல்: இணை சார் - பதிவாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

சேலம்; சேலம், உடையாப்பட்டியில், ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், கிழக்கு இணை சார் - பதிவாளர் 1 அலுவலகமும் உள்ளது.

அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த, 4ல் சோதனை நடத்தி, கணக்கில் வராத, 3.18 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக விசாரித்த போலீசார், இணை சார் - பதிவாளரான, மகுடஞ்சாவடியை சேர்ந்த கோகுல்ராஜ், 33, உதவியாளர் ரவிச்சந்திரன், வெளிநபர் ஒருவர் என, 3 பேர் மீது, லஞ்சம் வாங்கியதாக, நேற்று முன்தினம் வழக்குப்ப-திந்தனர்.
அவர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்-புள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்-டது.

Advertisement