லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர்
கிருஷ்ணராயபுரம்,:லாலாப்பேட்டை வாழை ஏல கமிஷன் மண்டியில், வாழைத்தார் விற்பனை ஜோராக நடந்தது.
கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்துக்குட்பட்ட கருப்பத்துார், கள்ளப்பள்ளி,
கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, சீகாம்பட்டி, கே.பேட்டை,
திம்மாச்சிபுரம், மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய
பகுதிகளில், விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதில்,
ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ரக வாழைத்தார்கள் அதிகளவில் சாகுபடி
செய்யப்படுகிறது. தற்போது நன்கு விளைச்சல் கண்டுள்ள
வாழைத்தார்களை அறுவை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன்
மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
நேற்று நடந்த
ஏலத்தில், பூவன் வாழைத்தார் ஒன்று, 250 ரூபாய், கற்பூரவள்ளி, 150
ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
வாழைத்தார்களை, உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி
சென்றதால், விற்பனை ஜோராக நடந்தது.
மேலும்
-
என்னை மட்டம் தட்டியவர்களுக்கு சிற்பங்கள் செய்து பதிலடி தருகிறேன்!
-
நொய்யல் குறுக்கே பாலம் பணி விரைவுபடுத்த உத்தரவு
-
விளையாட்டு// தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் சென்னை சவுமியாவுக்கு ‘வெள்ளி’
-
விளையாட்டு// மாநில மகளிர் கிரிக்கெட் 221 ரன் வித்தியாசத்தில் செங்கல்பட்டு அணி வெற்றி
-
அயநல்லுார் கிராமத்தில் வீடு, கோவிலில் திருட்டு
-
கூடலுார் ஏரியில் மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை