கரூரில் 'வீ த லீடர்​ஸ்' உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்

கரூர்:தமிழக பா.ஜ.,வில் இருந்து விலகி, அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'வீ த லீடர்​ஸ்' என்ற புதிய இயக்​கத்​தைத் தொடங்​கி​யுள்​ளார்.


இதையடுத்​து, தமிழக பா.ஜ.,வில் முக்​கியப் பொறுப்​பு​களில் இருந்து வந்த முன்​னணி நிர்​வாகி​கள் பலரும், தங்​களது பதவி​யை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தங்​களது ஆதர​வாளர்​களு​டன் கூட்​ட​மாக அண்​ணா​மலையின் இயக்​கத்தில் தங்​களை இணைத்து வரு​கின்​றனர். கிராமங்கள், நகரங்​கள், மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் அண்​ணா​மலை​யின், 'வீ த லீடர்​ஸ்' இயக்​கத்​தில் உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு முகாம்​களை அவரது ஆதர​வாளர்​கள் நடத்தி வரு​கின்​றனர்.
கரூர் உழவர் சந்தையில், 'வீ த லீடர்​ஸ்' சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், முன்னாள் பா.ஜ., நிர்வாகி கார்த்திகேயன் தலைமை வகித்து
தொடங்கி வைத்தார். ஜெயம் கணேஷ், அருள், சுரேஷ், துவாரகன், நாகமணி, சுசிலா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement