'இண்டி' கூட்டணி தோல்வி ஏன்? இ.கம்யூ., கூட்டத்தில் 'பளீச்'

1

புதுச்சேரி: இ.கம்யூ., கட்சியின் புதுச்சேரி மாநில குழு கூட்டத்தில், புதுச்சேரி அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டம் எல்லை சிவகுமார் தலைமை நடந்தது. தேசிய குழு முடிவுகள் மற்றும் இன்றைய அரசியல் நிலை குறித்து தேசிய செயலாளர் ஆன்னி ராஜா பேசினார். சட்டசபை தேர்தல் குறித்து மாநில செயலாளர் சலீம் பேசினார்.

கூட்டத்தில் தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னய்யா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நாராகலைநாதன், சுப்பையா, அந்தோணி, ரவி, எழிலன், ஜீவானந்தம், மாநில குழு உறுப்பினர்கள் ஹேமலதா, தசரதா, ஜீவானந்தம், துரை செல்வம், பெருமாள், மூர்த்தி, ரவிச்சந்திரன், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போலி மருந்து வழக்கில் அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஹிந்தி மொழி திணிப்பை கைவிட்டு மாநில கல்வி வாரியம் செயல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. மேலும், தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா மற்றும் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் முதல்வர் கனவுகளுடன் மேற்கொண்ட அதிகார போட்டி அணுகுமுறை தான் இண்டி கூட்டணி புதுச்சேரியில் தோல்விக்கு வழிவகுத்தது.

மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இடது சாரி கட்சிகள் தொடர்ச்சியாக மக்கள் நல போராட்டங்களை நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement