காரைக்காலில் தொடர் மின் வெட்டு நாஜிம் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர் என, நாஜிம் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டியுள்ளார்.

அவர், கூறியதாவது;

காரைக்கால் மாவட்டத்தில் தினமும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மாதத்துக்கு ஒரு முறை பராமரிப்பு என்ற பெயரில் மின்துறை அனைத்து பகுதி களிலும் மின்சாரத்தை துண்டித்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

துணை மின் நிலையங்களில் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து காணப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் மின்வெட்டு மற்றும் குடிநீர் பிரச்னை அதிகம் காணப்பட்டு வருகிறது.

பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இது குறித்து தி.மு.க., சார்பில், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வருவாய்த்துறை அதிகாரிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரில் வெளியே செல்வதால் பள்ளி மாணவர்கள் சான்றிதழ் பெறுவது பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே தொடர் மின் தடை, குடிநீர் பிரச்னையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement