2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,880 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 13,860 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம், வெள்ளி விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 11) ஆபரண தங்கம் கிராம் 13,500 ரூபாய்க்கும், சவரன் 1,08,000 ரூபாய்க்கும் விற்பனையானது.வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜூன் 12) தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து, 13,800 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்து, 1,10,400 ரூபாய்க்கு விற்கப் பட்டது.
வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து, 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜூன் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 13,860 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் சவரனுக்கு 2,880 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 270 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
பிரத்யேக வீடியோ!
2வது நாளாக அதிர்ச்சி தந்த தங்கம் விலை உயர்வு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஏறும் இறங்கும். விலையை தெருவில் உள்ள குண்டர்கள்தான் நிர்ணயம் செயகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கும் அவர்களின் ஏஜெண்டுகளுக்கும் மாமூல் வெட்டி விடுவார்கள்.மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்