இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
நமது நிருபர்
'ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
பின்லாந்து சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது: ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட பிறகு உலகளாவிய எண்ணெய் சந்தைகளை நிலைப்படுத்த உதவும் வகையில், 2022ல் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குமாறு அமெரிக்கா இந்தியாவை ஊக்குவித்தது.
விலை மற்றும் தரத்தின் அடிப்படையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குகிறோம். ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியதற்காக முதலில் எங்கள் மீது வரிகளை விதித்த பிறகு, அமெரிக்கா மீண்டும் தனது தடைகளை நீக்கியுள்ளது. நாட்டின் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்ட தனது எரிசக்தித் தேவைகளுக்கே இந்தியா முன்னுரிமை அளிக்கும்.
ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்கள், இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாகவே இது நடந்து வருகிறது. நாங்கள் இந்தியர்கள் ஐரோப்பாவிற்கு ஆபத்தை விளைவிக்கும் எதையும் ஒருபோதும் செய்ததில்லை. இந்திய ஆயுதங்களைக் கொண்டு எந்த ஐரோப்பிய நாடும் தாக்கப்படவில்லை. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
அந்த பேட்டியை பார்த்த போது ஜெய்ஷ்ங்கர் அவர்களின் ஆணித்தரமான மற்றும் சாந்தமான பதில் அங்கு இருந்தோர்களை மிரள செய்தது என்பதே உண்மை ...
ஐரோப்பிய ஆயுதங்களில் மிக பயங்கரமான ஆபத்தான ஆயும் கிருஸ்தவ மற்றும் சோஷலிசம்.
அவங்க இடத்தில் இருந்து கொண்டு அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்.காட்டும் வலுவான நிலை.பாராட்டுகள்.மேலும்
-
நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
-
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை; கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்
-
கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்!
-
ரூ.134 கோடி சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு; இபிஎஸ் விமர்சனம்
-
மும்பையில் ரூ.11 கோடி கஞ்சா கடத்தல்; 'மிஸஸ் கேரளா' போட்டியாளர் கைது
-
போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது; சொல்கிறார் உதயநிதி