தேங்கும் மழை நீரால் சாலை சேதமடையும் ஆபத்து
கூடலுார்: கூடலுார் பகுதியில் சாலையோரம் தேங்கும் மழை நீரால், சாலை சேதமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கேரளாவை தொடர்ந்து, அதன் எல்லையான கூடலுாரிலும் பருவமழை பெய்து வருகிறது.
இதனால், முக்கிய சாலைகளின் பல இடங்களில் மழை நீர் வழிந்தோட வழியின்றி மழைநீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக, இரும்புபாலம், தேவர்சோலை சாலையோரம் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில், சாலையோர மண்ணரிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனால், சமீபத்தில் சீரமைக்கப்பட்ட சாலைகள் சேதமடையும் அபாயம் உள்ளது.
டிரைவர்கள் கூறுகையில், ‘கூடலுார் பகுதியில் பருவமழை துவங்கி உள்ள நிலையில், கால்வாய் வசதியின்றி பல இடங்களில் மழைநீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. சாலையோரம் மண்ணரிப்பும் ஏற்படுகிறது. இதனால், சாலை சேதமடையும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’என்றனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement