ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்: 7 நாளுக்குள் விளக்கம் தர உத்தரவு
சென்னை: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார். சத்யபாமாஆகியோரிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 7 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேல், அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா, பெருந்துரை தொகுதியில் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
விஜய் தலைமையிலான தவெக அரசு மீது சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
இதன் பிறகு நான்கு பேரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டதால் அவர்கள் மீது ந டவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அதிமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது குறித்து நான்கு பேரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் பிரபாகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அடுத்த 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.
மூன்று பேர் கை கூப்பிக் கொண்டு இருக்க, இசக்கி மட்டும்.... புரிந்தவன் பிஸ்தா.
எங்களுக்கு ஆ தீ மு க்கா வின் தலமை போக்கு பிடிக்க வில்லை என்று கூறுவார்கள்.
கட்சி மாறல் தடைச் சட்டத்தின் கீழ் மனு விசாரணையில் உள்ள போது அவர்களது ராஜினாமாவை எப்படி ஏற்றீர்கள்? புகார் விசாரணையில் இருக்கும் அதிகாரிகளது ராஜினாமாவை அரசு ஏற்பதில்லை.
சபாநாயகர் அன்று என்னவோ M.L.Aக்கள் ராஜினாமா செய்ய காரணம் எல்லாம் கூறத் தேவை இல்லை என்றார். ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு, கெஜட்டிலும் வெளியாகி, தொகுதியும் காலிப் பட்டியலில் வந்த பின்னர் இப்போது போய் விளக்கம் கேட்கிறார்? அன்றே விளக்கத்தை கேட்டு அவர்கள் கொடுத்த விளக்கம் சபாநாயகருக்கு திருப்தியாக இருந்திருந்தால்தானே 4 பேர் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றிருக்க வேண்டும்?
இவர்கள் அடுத்து வரும் இடைத்தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். அடுத்து ஐந்து வருடங்களுக்கு எந்த அரசுப் பதவியிலும் இருக்கக் கூடாது.
முடாள் மக்களின் வரிப்பணம் தானே சும்மா திரும்பத் திரும்ப தேர்தல் நடத்துங்க எவன் கேட்க போறேன்