வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் கோலாகலம்
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில், 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் நேற்று, திருக்கல்யாண உத்சவம் கோலாகலமாக நடந்தது. காலை 7:30 மணிக்கு உற்சவர் வள்ளி, தெய்வனை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் மணக்கோலத்தில் மயில் மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 11:30 மணிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. பின், உற்சவ மூர்த்திகள் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மேலும்
-
செயற்கை நுண்ணறிவுக்கு தலையாட்டினால் முதலாளியாகிவிடும்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து
-
ஏப்ரல் கட்டணமே செலுத்தலாம்
-
தென் ஆப்ரிக்காவுக்கான துணை துாதராக கோவேந்தன் பொறுப்பேற்பு
-
பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் ‘மாஜி’ அமைச்சர் பெயர் ‘மிஸ்ஸிங்’
-
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் சேர்ந்து நிதியுதவி பெற அழைப்பு
-
ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண கலெக்டர் அறிவுறுத்தல்