திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

விருத்தாசலம்: சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழிவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த, மே 26ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

தொடர்ந்து தினசரி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

இந்நிலையில், நேற்று தீமிதி திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு கழுமரம் ஏறும் நிகழ்ச்சி, காலை 10:00 மணியவளில் அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது. 

அதைத்தொடர்ந்து, மாலை 4:00 மணியளவில், பெரிய ஏரியில் இருந்து கரகம் எடுத்து வந்து, தீமிதி திருவிழா நடந்தது. 

இதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை காலை 9:00 மணியளவில் மஞ்சள்நீர் உற்சவம், மாலை 5:00 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை, சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர். 

Advertisement