போலீஸ் செய்திகள்

விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி  உடுமலை சிவசக்தி காலனியை சேர்ந்தவர் சரக்கு ஆட்டோ டிரைவர் குப்புசாமி,59. இவர், நேற்றுமுன்தினம் பொள்ளாச்சியில் இருந்து மூன்று பேரை சரக்கு வாகனத்தில் அழைத்துக் கொண்டு, உடுமலை நோக்கி சென்றார்.

கோலார்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ரோடு  இணைப்பு சாலையில் சென்ற போது, எதிரே வந்த தண்ணீர் டேங்கர் லாரி, சரக்கு வாகனத்தின் மீது மோதியது. விபத்தில், குப்புசாமி மற்றும் மூன்று பேரும் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற கோமங்கலம் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனை வரும் வழியிலேயே குப்புசாமி இறந்தார். இது குறித்து, தண்ணீர் லாரி டிரைவர் சந்திராபுரத்தை சேர்ந்த கிேஷார்,24, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தூக்கிட்டு பெண் தற்கொலை நெகமம் அருகே உள்ள கப்பினிபாளையத்தை சேர்ந்த விவசாயி பொன்ராஜின் மனைவி சசிபிரியா, 39. இவர்களுக்கு திருமணமாகி, 15 ஆண்டுகள் ஆகிறது. சசிபிரியா சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன், அவரது அம்மா வீட்டிற்கு சென்றார். மன உளைச்சல் அதிகமானதால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா பதுக்கிய பெண் கைது நெகமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி, 50. நெகமம் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், பூக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். கஞ்சா பதுக்கல், விற்பனை குறித்து தகவல் தெரிந்தால், நெகமம் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement