ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
'ஆம்பர் என்டர்பிரைசஸ்' நிறுவனம், 'ஓப்போ மொபைல்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன் உற்பத்தி துறையில் கால் பதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, ஆம்பர் நிறுவன பங்குகளுக்கான இலக்கு விலையை 9,375 ரூபாயாக உயர்த்தி, இந்நிறுவன பங்குகளை 'வாங்கலாம்' என 'பிரபுதாஸ் லீலாதர்' தரகு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஆம்பர் என்டர்பிரைசஸ் தற்போது ஏ.சி., உள்ளிட்ட நுகர்வோர் மின்சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
பரிந்துரைப்பதற்கான முக்கிய காரணங்கள்
ஓப்போ மொபைல்ஸ் நிறுவனத்துடன், இந்நிறுவனம் கூட்டு உற்பத்தி தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாயிலாக 'ஓப்போ, ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி' நிறுவன ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளது
இந்த புதிய மொபைல் வணிக வர்த்தகத்தின் காரணமாக, ஆம்பர் நிறுவனத்தின் 2027 - 28ம் நிதியாண்டு வருவாய் கணிப்பு 10 சதவீதம் வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது
முதற்கட்டமாக ஸ்மார்ட்போன் அசெம்பிளிங் மற்றும் எஸ்.எம்.டி., பணிகளில் இந்நிறுவனம் கவனம் செலுத்தும். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் அதிநவீன சர்க்யூட் போர்டு, கேமரா, டிஸ்ப்ளே, சார்ஜர் போன்ற உதிரிபாகங்கள் தயாரிப்பில் இறங்க திட்டம்
வரும் 2027 மார்ச் காலாண்டில் சோதனை ஓட்டமும், 2027 ஏப்ரல் முதல் வணிகரீதியான உற்பத்தியும் தொடங்கும். 2027 - 28ம் நிதியாண்டில் 80-90 லட்சம் ஸ்மார்ட் போன்களும், 2028-29ல் 1.40 - 1.50 கோடி ஸ்மார்ட்போன்களும் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தற்போதுள்ள ஓப்போ நிறுவனத்தின் உற்பத்தி ஆலையையே, உள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்த உள்ளதால், இதற்கான ஆரம்பகட்ட முதலீடு 50 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும்
மொபைல் தயாரிப்பு என்பது குறைந்த லாப வரம்பு கொண்ட தொழில் என்றாலும், குறைவான செயல்பாட்டு மூலதனம் மற்றும் அதிக வருவாய் விகிதம் காரணமாக 30 முதல் 35 சதவீதம் வரை சிறந்த மூலதன ஆதாயத்தை தரும் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது
ஆம்பர் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'இல் ஜின் எலக்ட்ரானிக்ஸ்' சர்க்யூட் போர்டு தயாரிக்கும் 'அசென்ட் சர்க்யூட்ஸ்' நிறுவனத்தின் கூடுதல் 38.50 சதவீத பங்குகளை 337 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதன் வாயிலாக அதன் மொத்த பங்குரிமை 60 சதவீதத்தில் இருந்து 98.50 சதவீதமாக உயர்ந்து, முழு நிர்வாக கட்டுப்பாட்டையும் ஆம்பர் பெற்றுள்ளது.
மேற்கண்ட காரணங்களை குறிப்பிட்டு, ஆம்பர் என்டர்பிரைசஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என பிரபுதாஸ் லீலாதர் தரகு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
@block_B@ புதிய இலக்கு விலை ரூ.9,375 முந்தைய இலக்கு விலை ரூ.8,396 தற்போதைய சந்தை விலை ரூ.7,889block_B
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
-
யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை; முதல்வர் விஜய் பேச்சு
-
மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா