'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்

பொதுத்துறை நிறுவனமான 'கொச்சின் ஷிப்யார்ட்' நிறுவனத்தில் உள்ள தன் 67.91 சதவீத பங்குகளில் ஒரு பகுதியை, 'ஆபர் பார் சேல்' முறையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய சந்தை விலையிலிருந்து 6 முதல் 8 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் இப்பங்குகள் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மே 21 முதல் தற்போது வரை, 'சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, என்.எல்.சி., - என்.எச்.பி.சி., - ஜி.ஐ.சி., கோல் இந்தியா' ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றதன் வாயிலாக, மத்திய அரசு 16,000 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement