இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு

இரும்பு அல்லாத உலோகங்களுக்கான முன்பேர வணிக சந்தையை இந்தியாவில் மேம்படுத்தும் வகையில், தேசிய பங்கு சந்தை (என்.எஸ்.இ.,) மற்றும் பாரத் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் (பி.எம்.இ.,) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து என்.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகளவில் தாமிரம், அலுமினியம், துத்தநாகம், ஈயம் மற்றும் நிக்கல் போன்ற இரும்பு அல்லாத உலோகங்களின் நுகர்வில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி, உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த உலோகங்களின் விலை ஏற்ற இறக்கங்களை சமாளிக்க, வெளிப்படையான வர்த்தக முறை சந்தையாளர்களுக்கு தேவைப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, புதிய வர்த்தகப் பிரிவுகளை உருவாக்குவதோடு, விலை அபாயங்களை நிர்வகிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலோகங்களின் விலை ஏற்ற இறக்கங்களை சமாளிக்க, வெளிப்படையான வர்த்தக முறை சந்தையாளர்களுக்கு தேவைப்படுகிறது.

Advertisement