2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
அ ண்மையில், மத்திய பொதுத்துறை நிறுவனங்களான 'கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்டு இன்ஜினியர்ஸ்' என்ற ஜி.ஆர்.எஸ்.இ., மற்றும் 'சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்ற சி.பி.சி.எல்., நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 'நவரத்னா' அந்தஸ்து, அவற்றின் பங்கு விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், நேற்றைய வர்த்தகத்தில் ஜி.ஆர்.எஸ்.இ., பங்கு கிட்டத்தட்ட 5 சதவீதமும், சி.பி.சி.எல்., பங்கு 3 சதவீதம் வரையிலும் உயர்ந்தன.
நவரத்னா அந்தஸ்து கிடைத்ததால், இந்த நிறுவனங்கள் பெரிய திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து விரைவாக முடிவு எடுக்க முடியும். இதனால், வளர்ச்சி வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. வர்த்தக நேரத்தின் முடிவில் இரு நிறுவனங்களின் பங்கு விலையும் கிட்டத்தட்ட 2 சதவீத உயர்வுடன் முடிவடைந்தன.
பங்கு முந்தைய முடிவு (ரூ.) நேற்றைய உச்சம் (ரூ.) நேற்றைய முடிவு (ரூ.)
ஜி.ஆர்.எஸ்.இ., 2,798.30 2,934.70 2,854.00
சி.பி.சி.எல்., 1,097.80 1,128.60 1,115.90
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
-
யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை; முதல்வர் விஜய் பேச்சு
-
மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா