24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 785.60 5.80
டாடா ஸ்டீல் 198.80 -0.16
எட்டர்னல் 263.00 -1.30
டாடா மோட்டார்ஸ் பி.வி., 361.10 1.60
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1,324.70 15.20
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
எஸ் பேங்க் 24.95 -0.46
சுஸ்லான் எனர்ஜி 59.10 -0.10
என்.ஹெச்.பி.சி., 78.29 2.47
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 80.55 1.87
அசோக் லேலண்ட் 157.54 0.88
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி 650.00 -21.05
ஐநாக்ஸ் விண்ட் 92.75 2.03
என்.பி.சி.சி., (இந்தியா) 109.90 -1.55
டெல்ஹிவரி லிட் 484.60 23.50
ஆர்.பி.எல்., பேங்க் 377.15 -1.70
மற்ற சில பங்குகளின் விலை விவரம்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 431.05 4.15
சி.இ.எஸ்.சி., 173.95 5.05
இண்டஸ் டவர்ஸ் 412.30 1.10
கரூர் வைஸ்யா பேங்க் 295.50 3.75
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 1,041.00 5.90
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 24,106.60 24,168.05 24,073.15 24,102.90
நேற்று 93 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, நாள் முழுவதுமே ஏற்றத்துடன் நடைபெற்று, அதிகபட்சமாக 151 புள்ளிகள் வரை உயர்வு கண்டு, நாளின் இறுதியில் 89 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'மிட்கேப் 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.34 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோ கேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.85 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 19 குறியீடுகள் ஏற்றத்துடனும், 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 0.55 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 1.42 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,455 நிறுவனங்களின் பங்குகளில் 2,148 ஏற்றத்துடனும்; 1,205 இறக்கத்துடனும்; 102 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 5, 15, 20 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்துள்ளது. மொமெண்டம் இண்டிகேட்டர்களான எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.எஸ்.ஐ., சற்று வலுப்பெற்று, ஏற்றம் தொடர இன்னும் வாய்ப்புள்ளது என்ற சூழலை காட்டுகிறது. 24,000 புள்ளியில் உடனடி சப்போர்ட்டும், 24,150-ல் உடனடி ரெசிஸ்டென்ஸும் தென்படுகின்றது. 24,000-த்திற்கு மேலேயே இருக்கும் பட்சத்தில், 24,250 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 50-நாள் மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு கீழே வர்த்தகமாவதால், வேகமான ஏற்றங்கள் வந்தால், டெக்னிக்கலாக அது நிலைத்திருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே சொல்லலாம்.
ஆதரவு 24,060 24,020 23,970
தடுப்பு 24,155 24,210 24,250
******
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
-
யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை; முதல்வர் விஜய் பேச்சு
-
மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா