செஞ்சியில் 16ம் தேதி ஜமாபந்தி துவக்கம்

செஞ்சி: செஞ்சியில் வருவாய்த்துறை சார்பில் வரும் 16ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ள ஜமாபந்திக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வளர்மதி தலைமை தாங்குகிறார்.

ஜமாபந்தியில், வருவாய்த் துறையினர் பரமாரித்து வரும் பட்டா, சிட்டா பதிவேடு, கிராம கணக்குகள், நில அளவை உபகரணங்களை சரி பார்ப்பதுடன், பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெறப்பட உள்ளது.

மனுக்கள் மீது உரிய கால கெடுவுக்குள் தீர்வு காணப்படும் என்பதால் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற செஞ்சி தாசில்தார் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement