திமுக.,வில் இனி 10 துணை பொதுச்செயலர்கள்: ஸ்டாலின் புதிய முடிவு
- நமது நிருபர் -
தி.மு.க.,வில் துணை பொதுச்செயலர்கள் எண்ணிக்கையை உயர்த்த, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மு டிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க.,வில் துணை பொதுச்செயலர்களாக கனிமொழி, பெரியசாமி, ராஜா, சிவா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, சாமிநாதன் ஆகியோர் உள்ளனர்.
முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தினருக்கும், தேவேந்திரகுல வேளாளர், நாடார், நாயுடு சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக, துணை பொதுச்செயலர் எண்ணிக்கையை உயர்த்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில், சமூக பிரதிநிதித்துவ அடிப்படையில் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகம் நிறுத்தியதால், அக்கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மதம், ஜாதி ரீதியான ஓட்டு வங்கி குறைந்தது, தி.மு.க., தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கிறிஸ்துவர் ஓட்டுகள் த.வெ.க.,வுக்கு சென்று விட்டன. தி.மு.க., கூட்டணியில், 22 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த முஸ்லிம் லீக் கட்சியும் வெளியேறி விட்டது. எனவே, துணை பொதுச்செயலர் பதவியில் கிறிஸ்துவ, முஸ்லிம் மதத்தினருக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டிய நிர்ப்பந்தம், தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது, துணை பொதுச்செயலர் பதவியில், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியசாமி, சிவா உள்ளனர். தலித் சமுதாயத்திற்கு ராஜா, கவுண்டர் சமுதாயத்திற்கு சாமிநாதன், அருந்ததியர் சமுதாயத்திற்கு அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.
அதனால், நாடார், நாயுடு, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில், துணை பொதுச்செயலர் எண்ணிக்கையை ஏழில் இருந்து 10 ஆக உயர்த்த, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (51)
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
15 ஜூன்,2026 - 08:27 Report Abuse
, ஐயோ பாவம். தன் வினை தன்னைச் சுடும். 0
0
Reply
சிந்தனை - ,
13 ஜூன்,2026 - 22:33 Report Abuse
கவனம் தலைவரே ஏமாந்து விட வேண்டாம் முக்கியமான போஸ்டிங்கில் எல்லாம் மைனாரிட்டி மக்களை போடுவோம் ஆனால் அவர்களை எல்லாம் டம்மி போஸ்டிங்காகவே வைத்துக் கொள்வோம் உங்கள் குடும்பத்தினர் மட்டும்தான் உண்மையான அதிகாரத்தில் இருக்க வேண்டும் 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
13 ஜூன்,2026 - 22:24 Report Abuse
பத்து என்ன , நூறு பேரை போடு . திமுக மாண்டு விட்டது . மீட்க முடியாது . 0
0
Reply
பெருமைகள் - ,
13 ஜூன்,2026 - 21:57 Report Abuse
இதுவரை தேவேந்திர சமூகத்தை திமுக எதிரியாக நடத்தியதற்கு சாட்சி நாடாளுமன்றத்தில் 7 ஜாதிகளையும் மிகபிற்படுத்தப்பட்ட காலாடி ஜாதியையும் ஒன்றிணைத்து பல எதிர்ப்புகளிடயே பிஜேபி எம்பிக்களால் தேவேந்திரகுலவேளாளர் எனும் பெயர் மாற்ற மசோதாவின்போது திமுக எம்பிக்கல அனைவரும் வெளியேறி புறக்கணித்த வரலாற்றை தேவேந்திர சமூகம் இன்றுவரை பதிலடி தர காத்திருக்கிறது 0
0
Reply
சிவா. தொதநாடு. - Aruvankadu,இந்தியா
13 ஜூன்,2026 - 21:56 Report Abuse
உங்கள் ஆலோசகர்களை கவனமாக தேர்ந்தெடுங்கள் என்று ஐந்து வருடமாக சொல்லி சொல்லி அழுது போய்விட்டோம் இனி நீங்கள் பார்த்து என்ன 100 என ஆயிரம் என்ன கடைசியில் அந்த நம்பர் தான் மிஞ்சும் 0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
13 ஜூன்,2026 - 20:56 Report Abuse
யாரோ ஈரோட்டில் இருந்து சாதிகளை ஒழிப்பேன் என்று புறப்பட்டு நல்லா கல்லா கட்டினார். அவர் வழி வந்த கண்ணீர் துளிகள் தமிழ் நாட்டில்
சாதி பாகுபாடு ஒழிக்கப் பட்டுவிட்டது.
பார்ப்பனியம் குழி தோண்டி புதைக்கப்
பட்டுவிட்டது என்று வெற்றி முரசு கொட்டி பாடினார்கள். இப்ப என்னவென்றால் சாதிக்கு ஒரு துணை பொது செயலர் நியமிக்கப் போகிறார்களாம். இது ராசா மற்றும் கனிமொழியின் அதிகாரத்தை குறைக்கும் செயல் என்று நன்கு தெரிகிறது. அது சரி பிராமண சாதிக்கும் பதவி உண்டா ? 0
0
Reply
Eswaran - TAMILNADU,இந்தியா
13 ஜூன்,2026 - 20:05 Report Abuse
பெரியார் ஜாதியை ஒழித்து விட்டார் ன்னு சொல்லி பெரிய போட்டோ வைச்சு கும்புடுறீங்க தினமும்... அப்புறம் எதுக்கு இப்போ ஜாதி ரீதியான பதவிகள்?? என்னய்யா உங்க சித்தாந்தம்...?? 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
13 ஜூன்,2026 - 19:35 Report Abuse
கட்சியில் எத்தனை துணை பொது செயலாளர்களை நியமித்து என்ன பயன் ஒரு முதல்வருக்கு ஒரு துணை முதல்வர்தான் இருக்க வேண்டுமா ஏன் உத்திரபிரதேசத்தில் இரண்டு துணை அமைச்சர்கள் இல்லையா அதுபோன்றே இங்கும் செய்திருந்தால் என்ன குறைந்து போயிடும் இதுபோன்றே பத்து துணை முதல்வர் பதவியையும் கொடுங்கள் பத்து எதிர் கட்சி தலைவர்கள் என்றும் பெயரிடுங்கள் பிறகு பாருங்கள் கட்சி மேலே எழும் தனது பிள்ளையை தனிமைப்படுத்தி ஒரே ஒரு துணை முதல்வர் பதவி கொடுத்து கட்சியே காணாமல் ஆக்கிவிட்டிர் இப்போது புள்ளையாண்டானுக்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியையும் கொடுத்து எஞ்சியுள்ள கட்சி காரர்களையும் எம். எல். எங்களையும் ஏமாற்றி வஞ்சனை செய்து மனம்மாறி அடுத்த கட்சிக்கு போவதற்கு ஆயத்தம் செய்து விட்டிர்கள் இன்னும் நீங்கள் கட்சிக்கும் கட்சிகாரர்களுக்கும் என்ன செய்ய மீதம் உள்ளது எல்லாமே முடிந்துவிட்டது 0
0
Reply
chinnamanibalan - ,
13 ஜூன்,2026 - 19:23 Report Abuse
திமுகவின் தலைமைப் பதவியை முதலில் பிறருக்கு அளிக்க முன்வர வேண்டுமேயன்றி, துணைப் பொதுச் செயலாளர் எண்ணிக்கையை பெருக்கி, பத்தோடு பதினொன்றாக சாதிக்கு ஒருவருக்கு கொடுத்து, திமுக நினைப்பதை ஒருபோதும் சாதிக்க முடியாது! மாறாக கண்துடைப்பு வேலையாக இது இருக்கும்!! 0
0
Reply
Sridharan Venkatraman - Tiruchirappalli,இந்தியா
13 ஜூன்,2026 - 17:50 Report Abuse
பிராமணாளுக்கு ஒரு பொது செயலாளர் பதவி தருவேளா 0
0
Reply
மேலும் 41 கருத்துக்கள்...
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
Advertisement
Advertisement