பைக் டாக்சிக்கு விதிகள் எப்போது? அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை: தமிழகத்தில் தனியார் செயலிகள் மூலம் இயக்கப்படும் பைக் டாக்சி சேவையை முறைப்படுத்த விதிமுறைகள் உருவாக்க தாக்கலான வழக்கில், எப்போது விதிகள் கொண்டுவரப்படும் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் பைக்டாக்சி சேவையை முறைப்படுத்துவதற்கான சட்ட விதிமுறைகள் இல்லை. பிற டாக்சி சேவைகளை போல அல்லாமல், பைக் டாக்சி சேவையை தனிநபர்களால் செயல்படுத்த முடியாது. அவை முழுமையாக தனியார் நிறுவன (அகரிகேட்டர்) செயலிகள் மூலமே இயக்கப்படுகின்றன.
'அகரிகேட்டர்' நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. அவற்றில் பணிபுரியும் பைக் டாக்சி டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இது அரசியல் அமைப்பின் சமத்துவம், வாழ்வுரிமை கொள்கைக்கு எதிரானது.
'அகரிகேட்டர்' நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க, அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த மோட்டார் வாகன சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு, கட்டண நிர்ணயம், இன்சூரன்ஸ், புகார்களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் பைக் டாக்சி சேவையை முறைப்படுத்த விதிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சிவா ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: எப்போது விதிமுறைகள் கொண்டு வரப்படும். இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை முதன்மை செயலர், தமிழக போக்குவரத்துத்துறை முதன்மை செயலர், கமிஷனர் ஜூலை 6 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
பைக் டாக்ஸிகள் கால மாற்றத்தின் கட்டாயம். சாதாரண மக்களின் வேலை வாய்ப்பு அலுவலகம்.
ஒரே ஒரு முறை முயற்சித்தேன். ஹெல்மெட்க்குள் எண்ணெய்ப் பிசுக்கு வாசம், பொடுகு ( பேனும்? ). போதுமடா சாமின்னு விட்டுட்டேன்.
தனிநபரின் வேலைவாய்ப்பினை பறிப்பதில் அரசு நிறுவனங்களுக்கு உள்ள அக்கறை என்றும் கொள்ளலாம்
சட்டத்தில் பல ஓட்டைகள். அதில் இது ஒன்று.
"அரசாங்கத்தின் சிஸ்டத்தில் இருக்கும் மிகப் பெரிய ஓட்டையை இந்த வழக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. ஒருபுறம் விதிகள் இல்லை என்று கூறி ஆர்.டி.ஓ அதிகாரிகள் வண்டிகளைப் பறிமுதல் செய்கிறார்கள், மறுபுறம் கார்ப்பரேட் கம்பெனிகள் செயலிகளைத் தடையின்றி இயக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த இரட்டை நிலைப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஜூலை 6-ல் அறிக்கை தாக்கல் செய்யும்போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் ரைடர்கள் மற்றும் கஸ்டமர்களின் தரப்பு நியாயங்களை உணர்ந்து ஒரு தெளிவான சட்ட வடிவத்தைக் கொண்டு வர வேண்டும்"
"பைக் டாக்ஸி சிஸ்டத்திற்கு முறையான வழிகாட்டுதல்கள் Guidelines கொண்டு வருவது மிக மிக அவசியம். பயணிகளின் பாதுகாப்பு, விபத்து ஏற்பட்டால் முறையான இன்சூரன்ஸ் கிளைம் Insurance Claim வசதி மற்றும் கம்பெனிகள் இஷ்டத்திற்குச் சார்ஜ் செய்யாதபடி நியாயமான கட்டண நிர்ணயம் போன்றவற்றை அரசாங்கம் கறாராக முறைப்படுத்த வேண்டும். ஆன்லைன் ஆப் லாஜிஸ்டிக்ஸ் துறையைத் தடை செய்யாமல், அதை சட்டத்திற்குள் கொண்டு வருவதே வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் காலத்திற்கு அக்மார்க் கச்சிதமான தீர்வாக இருக்கும்"
"வாசகர் ஆம் ஆத்மி சொல்லியிருப்பதுதான் 200% அக்மார்க் கிரவுண்ட் எதார்த்தம் இன்று தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய இளைஞர்களும், பார்ட்-டைம் வேலை செய்யும் ஊழியர்களும் தங்களது குடும்ப வாழ்வாதாரத்திற்காகத்தான் பைக் டாக்ஸி ஓட்டுகிறார்கள். கம்பெனிகள் ஆப் நடத்த அரசு அனுமதி கொடுத்துவிட்டு, நடுரோட்டில் வண்டியை ஓட்டும் ஏழை ரைடர்களைப் பிடித்து போலீஸ் அபராதம் விதிப்பது என்ன மாதிரியான நியாயம்? உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்று, த.வெ.க அரசு ரைடர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கறாரான, எளிய விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்"
பொதுவாக பார்ட் டைம் வேலையாக பைக் டேக்சிகள் இயக்குகிறார்கள் ..விதிகள் என்று இடையூறு ஏற்படுத்தக்கூடாது