புற்றுநோய் பரிசோதனை முகாம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் நகரில் அரசு சார்பில் புற்றுநோய் பரிசோதனை முகாம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த கண்டமானடி ஊராட்சி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் நகரில், சென்னை அடையாறு அரசு புற்றுநோய் மருத்துவமனை குழுவினர் சார்பில் புற்றுநோய் பரிசோதனை முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் வீரா ஏழுமலை தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் சகாதேவன் வரவேற்றார்.
புற்றுநோய் மருத்துவமனை மருத்துவ அதிகாரி கார்த்திகேயன், கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வனிதா, பிரசன்னாதேவி உள்ளிட்ட குழுவினர் மக்கள் நலம் குறித்தும், புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, பெண்கள் மற்றும் ஆண்களுக்கு புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement