துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
திட்டக்குடி, ஜூன் 13–
திட்டக்குடி, விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
திட்டக்குடி, விருத்தாசலம் நகராட்சி அலுவலர்கள், நல்லுார், மங்களூர் ஒன்றிய அலுவலர்கள், பெண்ணாடம் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில், திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட துறை சார்ந்த நிறைகள், குறைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் ராஜ்குமார் கேட்டறிந்தார்.
பின்னர், அமைச்சர் ராஜ்குமார் பேசியதாவது;
நமது முதல்வர் தலைமையிலான அரசு மக்களுக்கானது. ஒவ்வொரு திட்டமும் மக்களுக்கு சென்றடைய வேண்டும். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பது தான் முக்கிய நோக்கம். துறை சார்ந்த பிரச்னைகள் ஏதாவது இருப்பின் உடனடியாக என்னிடம் தொடர்பு கொண்டு பேசலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
நொய்யல் குறுக்கே பாலம் பணி விரைவுபடுத்த உத்தரவு
-
விளையாட்டு// தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் சென்னை சவுமியாவுக்கு ‘வெள்ளி’
-
விளையாட்டு// மாநில மகளிர் கிரிக்கெட் 221 ரன் வித்தியாசத்தில் செங்கல்பட்டு அணி வெற்றி
-
அயநல்லுார் கிராமத்தில் வீடு, கோவிலில் திருட்டு
-
கூடலுார் ஏரியில் மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை
-
சிற்றுந்து -மீது- பேருந்து மோதி 4 பேர் படுகாயம்; பைக் நாசம்