ஆமதாபாத் விமான விபத்து விசாரணையில் முன்னேற்றம்: அதிகாரிகள் தகவல்
புதுடில்லி: ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி, குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட ஓரு நிமிடத்திற்குள் விபத்துக்குள்ளானது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விமான விபத்து விசாரணை குழுவினர் ( ஏஏஐபி) நடத்தி வருகின்றனர்.
விபத்து முடிந்து ஓராண்டு ஆகும் நிலையில் இந்தக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த ஓராண்டாக, விபத்து குறித்து தொடர்பாக தொழில்நுட்ம், நடவடிக்கை, அமைப்பு மற்றும் மனித காரணிகள் உள்ளடக்கிய விரிவான மற்றும் தீவிரமான விசாரணை நடந்து வருகிறது.
சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், தொழில்நுட்ப ஆலோசகர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் இந்த முயற்சிக்குத் துணை புரிந்துள்ளனர்.
விமான அமைப்புகள், விமானப் பதிவுத் தகவல்கள், இயந்திரம் சார்ந்த பாகங்கள், பராமரிப்பு மற்றும் விமாத்தில் பதிவான தகவல்கள், இயந்திரம் சார்ந்த பாகங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விசாரணை செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நொய்யல் குறுக்கே பாலம் பணி விரைவுபடுத்த உத்தரவு
-
விளையாட்டு// தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் சென்னை சவுமியாவுக்கு ‘வெள்ளி’
-
விளையாட்டு// மாநில மகளிர் கிரிக்கெட் 221 ரன் வித்தியாசத்தில் செங்கல்பட்டு அணி வெற்றி
-
அயநல்லுார் கிராமத்தில் வீடு, கோவிலில் திருட்டு
-
கூடலுார் ஏரியில் மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை
-
சிற்றுந்து -மீது- பேருந்து மோதி 4 பேர் படுகாயம்; பைக் நாசம்
Advertisement
Advertisement