வன விலங்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் கசிவு நீர் குட்டை

கூடலுார்: கூடலுார் புளியாம்பாறை காபிகாடு அருகே, வனவிலங்குகளின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்ய, வனத்தை ஒட்டிய நீரோடை பகுதியில், 60 மீட்டர அகலம் 60 மீட்டர் நீளத்தில், புதிய கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டு, அதில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இவை, கோடையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்தது. தற்போது பருவமழை துவங்கி, நீர்வரத்து அதிகரித்ததால், கசிவுநீர் குட்டை முழுமையாக நிரப்பி உள்ளது. இந்நிலையில், கூடலுார் வன அலுவலர் தேவராஜ் நேற்று கசிவுநீர் குடையை ஆய்வு செய்தார்.

மேலும், ‘பருவமழையின் போது மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, குறிப்பிட்ட பகுதிகளில் புற்கள் நடவு செய்ய வேண்டும். கசிவு நீர் குட்டை அமைப்பதற்கு சாத்தியம் உள்ள இடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்,’ என, அறிவுறுத்தினார். வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் குமரன், வனக்காவலர் பொம்மன் உடனிருந்தனர்.

Advertisement